வேலூரில் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்,
வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துவாச்சாரி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலக சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளன தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரந்தாமன் முன்னிலை வகித்தார்.
இதில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். சாலை வரியை டிசம்பர் மாதம் வரை ரத்து செய்ய வேண்டும். வாகன கடன் செலுத்த டிசம்பர் மாதம் வரை அவகாசம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story