கூட்டுறவு மந்திரி பாலசாகேப் பாட்டீலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி


கூட்டுறவு மந்திரி பாலசாகேப் பாட்டீலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி
x
தினத்தந்தி 16 Aug 2020 2:15 AM IST (Updated: 16 Aug 2020 2:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய கூட்டுறவு மந்திரி பாலசாகேப் பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தொற்றால் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி ஆவார்.

மும்பை,

மராட்டிய கூட்டுறவுத்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் பாலசாகேப் பாட்டீல். சத்தாரா மாவட்ட பொறுப்பு மந்திரியான இவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் காரட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மந்திரியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆதரவாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் அவரது மகன் தெரிவித்தார்.

இதற்கிடையே சமீப நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மந்திரி பாலசாகேப் பாட்டீல் கேட்டுக்கொண்டு உள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்.

7-வது மந்திரி

மராட்டியத்தில் ஏற்கனவே காங்கிரசை சேர்ந்த அசோக் சவான், அஸ்லம் சேக், தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஜிதேந்திர அவாத், தனஞ்செய் முண்டே, சஞ்சய் பன்சோடே, சிவசேனாவை சேர்ந்த அப்துல் சத்தார் ஆகிய மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

எனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி பாலசாகேப் பாட்டீல் ஆவார்.

Next Story