கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்டது ஒரே நாளில் 8,818 பேருக்கு கொரோனா பாதிப்பு 114 பேர் மரணம்
கர்நாடகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 8,818 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 114 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஏற்கனவே 2 லட்சத்து 11 ஆயிரத்து 108 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 8,818 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 926 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 34 ஆயிரத்து 811 பேர் குணமடைந்து உள்ளனர். இதில், நேற்று மட்டும் 6 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 81 ஆயிரத்து 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று பெங்களூரு நகரில் 3,495 பேருக்கும், மைசூருவில் 635 பேருக்கும், கலபுரகியில் 189 பேருக்கும், தார்வாரில் 239 பேருக்கும், பல்லாரியில் 759 பேருக்கும், கொப்பலில் 178 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 271 பேருக்கும், பாகல்கோட்டையில் 168 பேருக்கும், உடுப்பியில் 241 பேருக்கும், உத்தரகன்னடாவில் 75 பேருக்கும், பெலகாவியில் 358 பேருக்கும், விஜயாப்புராவில் 232 பேருக்கும், துமகூருவில் 161 பேருக்கும், மண்டியாவில் 84 பேருக்கும், ராய்ச்சூரில் 155 பேருக்கும், பீதரில் 113 பேருக்கும், தாவணகெரேயில் 327 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 152 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 44 பேருக்கும், கோலாரில் 55 பேருக்கும், குடகில் 48 பேருக்கும், சித்ரதுர்காவில் 34 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 64 பேருக்கும், ஹாசனில் 154 பேருக்கும், சிக்கமகளூருவில் 79 பேருக்கும், யாதகிரியில் 64 பேருக்கும், ராமநகரில் 53 பேருக்கும், ஹாவேரியில் 116 பேருக்கும், கதக்கில் 142 பேருக்கும், சிவமொக்காவில் 133 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
114 பேர் பலி
மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 114 பேர் கொரோனா தொற்றுக்கு மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3,821 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் 35 பேரும், மைசூருவில்10 பேரும், பல்லாரி, தட்சிண கன்னடாவில் 6 பேரும், தார்வாரில் 7 பேரும், பெலகாவி, தாவணகெரே, சிவமொக்காவில் தலா 5 பேரும், ஹாசன், சிக்கமகளூருவில் தலா 4 பேரும், ராய்ச்சூர், பீதரில் தலா 3 பேரும், கதக், உடுப்பி, விஜயாப்புரா, கலபுரகி, கொப்பல், துமகூரு, பெங்களூரு புறநகர், ஹாவேரியில் தலா 2 பேரும், மண்டியா, உத்தரகன்னடா, யாதகிரி, சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூரில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை 7 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று புதிய உச்சமாக 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story