திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 488 பேர் பாதிப்பு ஒரே நாளில் 8 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 488 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 22 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 19 ஆயிரத்து 870 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 15 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 81 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் மேட்டுத்தெரு, பாபா நகர் பகுதியில் வசிக்கும் 35 வயது வாலிபர், கோவிந்தராஜபுரம் முதல் தெருவை சேர்ந்த 63 வயது முதியவர் உள்பட 22 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பேரமனூர் எம்.டி.சி.நகரில் வசிக்கும் 3 மற்றும் 9 வயது சிறுவன், 31, 35 வயது இளம்பெண்கள், என்.எச்.3 திலகர் தெருவை சேர்ந்த 4 பேர் உள்பட 24 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 72 வயது மூதாட்டி ஆகியோர் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 911 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 537 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்தது. 3 ஆயிரத்து 32 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 21, 25 வயதுடைய வாலிபர்கள், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 307 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 876 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 853 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 176 ஆனது. 2 ஆயிரத்து 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story