கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது


கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 18 Aug 2020 3:45 AM IST (Updated: 18 Aug 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கொரோனாவை பொறுத்தவரை கிராமம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த வைரஸ் கிராமம் வரை பரவி இருக்கிறது. தற்போது இந்த வைரஸ் எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது என்றால் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

உலக சுகாதார மையம் முககவசம் அணிய வலியுறுத்தி வருகிறது. முககவசம் அணிவதன் மூலம் 90 சதவீதம் நோய் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தலைவர் அழகுராஜா, ஏ.எஸ் நகர் மக்கள் நல்வாழ்வு குடியிருப்போர் சங்க தலைவர் கணேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் அத்திரமரப்பட்டி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். அதன்படி கடந்த வாரம் தூத்துக்குடி சிப்காட், வடபாகம் பகுதியில் 3 நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ய உறுதுணையாக இருந்த தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், தனிப்பிரிவு காவலர் கலைவாணர் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் உள்பட மொத்தம் 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

Next Story