பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்


பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Aug 2020 10:35 PM IST (Updated: 20 Aug 2020 10:35 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22 ஆம் தேதி(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் அபாயம் இருப்பதால் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பதையும், ஊர்வலம் நடத்துவதையும் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்க மக்கள் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தவும் அவர் கேட்டு கொண்டார்.

Next Story