நாமக்கல் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,411 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 1,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,365 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே நேற்று பரமத்திவேலூரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் உள்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று குமாரபாளையம், நாமக்கல்லை சேர்ந்த தலா 6 பேர், ராசிபுரம் பகுதியை சேர்ந்த 5 பேர், செல்லப்பம்பட்டி மற்றும் வெடியரசம்பாளையத்தை சேர்ந்த தலா 3 பேர், பரமத்திவேலூர், ஆவாரங்காடு பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், காரவள்ளி, பள்ளிபாளையம், ஆண்டிக்காடு, சேந்தமங்கலம், காக்காவேரி, அரியாவுண்டம்பட்டி, ஆர்.புதுப்பட்டி, மோகனூர், முட்டாஞ்செட்டி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், கொண்டமநாயக்கன்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, அம்மாசிபாளையம், மல்லசமுத்திரம், நெம்பர்.3 கொமாரபாளையம், ஆண்டகளூர்கேட், ஒட்டமெத்தை, சேலம் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
1,411 பேருக்கு கொரோனா
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 30 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை 1,008 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 25 பேர் உயிரிழந்த நிலையில், 378 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story