குமரியில் கொரோனா பலி எண்ணிக்கை 150-ஐ தாண்டியது மொத்த பாதிப்பு 8,248 ஆக உயர்வு
குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேர் இறந்ததை தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை போன்று பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் வரை 148 பேர் பலியாகி இருந்தனர். நேற்று கொரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்தது. அதாவது நாகர்கோவில் சைமன்காலனியை சேர்ந்த 28 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
157 பேருக்கு தொற்று
இதேபோல மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மேலும் மேலராமன்புதூரை சேர்ந்த 46 வயது ஆண் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 91 ஆக இருந்தது. நேற்று பாதிக்கப்பட்ட 157 பேரையும் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 248 ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story