மத்திய அரசு வழங்கும் கேல் ரத்னா விருதை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் தடகள வீரர் மாரியப்பன் பேட்டி
மத்திய அரசு வழங்கும் கேல் ரத்னா விருதை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று சேலம் மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் கூறினார்.
சேலம்,
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான தடகள வீரர் மாரியப்பனுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
தேர்வு குழு பரிந்துரை
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தமிழக தடகள வீரர் சேலம் மாரியப்பன் உள்பட 5 பேரின் பெயர்களை தேர்வு குழு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த அவரது சொந்த ஊரான பெரியவடகம்பட்டியில் அவரது நண்பர்களும், உறவினர்களும், குடும்பத்தினரும் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெரியவடகம்பட்டி சேர்ந்த மாரியப்பனுக்கு சரோஜா என்ற தாயும், சுதா என்ற சகோதரியும், கோபி, குமார் ஆகிய 2 சகோதரர்களும் உள்ளனர். தற்போது பெங்களூரூவில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாய் விடுதியில் மாரியப்பன் பணிபுரிந்து வருகிறார். மேலும் அங்கு அவர் தடகள பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
மத்திய அரசின் கேல் ரத்னா விருது பெறும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் கூறியதாவது:-
மத்திய அரசு சார்பில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் எனக்கு கேல் ரத்னா விருது வழங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தேன். கடந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றேன்.
மத்திய அரசு வழங்கும் கேல் ரத்னா விருதை தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். என்னை போன்று ஏராளமான இளைஞர்கள் கிராமப்புறங்களில் பல்வேறு திறமைகளுடன் உள்ளனர். அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு பயிற்சிகள் அளித்தால் அவர்களும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும். விளையாட்டில் என்னை பொறுத்தவரையில் தமிழக அரசு எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க என்னை தயார் படுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story