விருதுநகரில் 38 பேர் பாதிப்பு; 2 பேர் பலி


விருதுநகரில் 38 பேர் பாதிப்பு; 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 Aug 2020 1:34 AM GMT (Updated: 2020-08-23T07:04:02+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 38 ஆயிரத்து 970 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 12,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 9,621 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 11,064 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

5 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 371 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 325 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

38 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அருப்புக்கோட்டை, வழிமறித்தான், மடத்துப்பட்டி, சிவகாசி பட்டாசு ஆலையில் பணியாற்றும் 42 வயது, 38 வயது பெண்கள், 48 வயது நபர், தென்பாலையில் உள்ள கல்குவாரியில் பணியாற்றும் 54, 32, 19 வயது நபர்கள், விருதுநகர் ஜக்கதேவிநகரை சேர்ந்த 63 வயது மூதாட்டி, ஜி.என்.பட்டியை சேர்ந்த 43 வயதுநபர், விருதுநகர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 46 வயது நபர், மதுரை மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 32 வயது பெண், பாலையம்பட்டி, பந்தல்குடி, வெம்பக்கோட்டை, புளியங்குளம், மேலக்கண்டமங்களம், கல்குறிச்சி, நார்த்தம்பட்டி, கல்லூரணி, மறவர்பெருங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயர்வு

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 12,854 ஆக உயர்ந்துள்ளது.தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளதால் கிராமப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 2 பேர் பலியாகினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.

Next Story