மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் நேற்று முன்தினம் 14 ஆயிரத்து 492 பேருக்கும், நேற்று புதிதாக 10 ஆயிரத்து 441 பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 82 ஆயிரத்து 383 ஆகி உள்ளது. இதில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 8 ஆயிரத்து 157 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
258 பேர் பலி
இதேபோல மராட்டியத்தில் நேற்று முன்தினம் 297 பேரும், நேற்று 258 பேரும் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 253 ஆகி உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3.26 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை 36 லட்சத்து 16 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது 12 லட்சத்து 30 ஆயிரத்து 982 பேர் வீடுகளிலும், 34 ஆயிரத்து 820 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story