சின்னத்திரைத்தொடர் படப்பிடிப்பு காரணமாக சென்றபோது டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருக்கழுக்குன்றம் அருகே சின்னத்திரைத்தொடர் படப்பிடிப்பு காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி ஒருவர் டிராக்டர் மோதிய விபத்தில் பலியானார்.
கல்பாக்கம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர் கிராமம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). இவர் சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் சின்னத்திரை படப்பிடிப்பு குழுவில் வேலை செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (32). இவரும் அதே படப்பிடிப்பு குழுவில் வேலை செய்து வருகிறார்.
இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பெரிய காட்டுப்பாக்கம் கிராமத்தில் சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்ய நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை புஷ்பராஜ் ஓட்டினார். பின்னர் அங்கு இருந்து இருவரும் திரும்பி கொண்டிருந்தனர்.
திருக்கழுக்குன்றத்தை அடுத்த பாண்டூர் கிராமம் அருகே செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் வலது புறமாக திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிள் டிராக்டரின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அன்பழகன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புஷ்பராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story