14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்


14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2020 7:41 AM IST (Updated: 26 Aug 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.

போராட்டத்திற்கு எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் ராக்கிமுத்து தலைமை தாங்கினார். தமிழ்செல்வன், அரசு பணியாளர் சங்கத்தை சேர்ந்த மதன், விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுதாகர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் (எஸ்.சி,எஸ்.டி) கூட்டமைப்பு மாவட்ட செய லாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசோதனை

போராட்டத்தில் ராக்கிமுத்து பேசும்போது, அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும். மேலும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும். ஊழியர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்றார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி நின்றனர்.

Next Story