திசையன்விளையில் சோகம் பிரசவத்தின்போது தாய், குழந்தை சாவு


திசையன்விளையில் சோகம் பிரசவத்தின்போது தாய், குழந்தை சாவு
x
தினத்தந்தி 29 Aug 2020 3:30 AM IST (Updated: 29 Aug 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் பிரசவத்தின்போது தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் உவரி நடு தெருவைச் சேர்ந்தவர் ஜீட்ஸ். மீனவர். இவருடைய மனைவி அல்பிட்டா (வயது 26). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அல்பிட்டா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்பிட்டாவை உவரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பிரசவிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அல்பிட்டாவும், வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்தில் தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story