மாவட்ட செய்திகள்

‘பிட்’ இந்தியா விடுதலை ஓட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை இயக்குனர் தகவல் + "||" + FIT India Liberation flow May apply Director of Education Information

‘பிட்’ இந்தியா விடுதலை ஓட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை இயக்குனர் தகவல்

‘பிட்’ இந்தியா விடுதலை ஓட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை இயக்குனர் தகவல்
பிட் இந்தியா விடுதலை ஓட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,

புதுவை பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் பிட் இந்தியா இயக்கம் (மக்கள் இயக் கம்) பிரதமரால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் வாயிலாக இந்திய அரசு பிட் இந்தியா விடுதலை ஓட்டம் என்ற நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் திரளாக இணைத்து ஒரு ஓட்ட நிகழ்ச்சியை அக்டோபர் 2-ந்தேதி வரை நடத்த இருக்கிறது.


இந்த ஓட்ட நிகழ்ச்சியின் தத்துவம் என்னவென்றால் இதில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில், தங்களுக்கு ஏற்ற வழித்தடங்களில் நடக்கவோ, ஓடவோ அவரவர்களுக்கு ஏற்ற வழிகளில் செய்யலாம். இந்த நிகழ்வின்போது அவர்கள் இடையிடையே ஓய்வும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பிட் இந்தியா இணையதளத்தில் (www.fitindia.gov.in) தங்கள் பெயர் மற்றும் தங்கள் ஓட்ட, நடை நிகழ்ச்சியின் விவரங்களை சமூக இடைவெளியினை கருத்தில் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். இந்த நிகழ்வுகளை புதிய கோணத்தில் அணுகி மெய்நிகர் ஓட்டமாக அதாவது ஓட்டப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது போலவும் நடத்திக்கொள்ளலாம்.

பிட் இந்தியா விடுதலை ஓட்டம் என்ற இந்த நிகழ்வில் புதுச்சேரியில் உள்ள அனைத்து துறை, வாரிய, சங்க, நிறுவன, பள்ளி மற்றும் கல்லூரி தலைவர்கள் தங்களிடம் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவித்து அவர்கள் தங்கள் உற்றார், உறவினர், மற்றும் நண்பர்களுடன் சமூக இடைவெளியை பின்பற்றி உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பிட் இந்தியா’ ஓட்டத்தில் ரெயில்வே பொது மேலாளர் மனைவியுடன் பங்கேற்றார்
‘பிட் இந்தியா’ ஓட்டத்தில் ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தனது மனைவியுடன் பங்கேற்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை