விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா


விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Aug 2020 3:30 AM IST (Updated: 29 Aug 2020 7:23 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 635 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 13,214பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 9,924 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 11,590 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 62 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 218 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி பெரியார்நகரை சேர்ந்த 43 வயது நபர், 38 வயது பெண், 18 வயது பெண், திருத்தங்கல் முத்துநகரை சேர்ந் 45 வயது பெண், செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த 55 வயது நபர், வெள்ளைசாமியார் தெருவை சேர்ந்த 28 வயது பெண், சித்துராஜபுரத்தை சேர்ந்த 46 வயது நபர், நாரணாபுரத்தை சேர்ந்த 48 வயது நபர், 38 வயது பெண், விஸ்வநத்தத்தை சேர்ந்த 36 வயது நபர், 50 வயது பெண், வடமலாபுரத்தை சேர்ந்த 39 வயது பெண், விருதுநகர் காந்திநகரை சேர்ந்த 58 வயது பெண், 63 வயது நபர், பாரைப்பட்டி தெருவை சேர்ந்த 50 வயது பெண், மார்டன்நகரை சேர்ந்த 47 வயது பெண், 33 வயது பெண், என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த 55 வயது நபர், லட்சுமிகாலனியை சேர்ந்த 43 வயது பெண் உள்பட 152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13,366 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மட்டும் 1,433 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 23 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பட்டியல் வெளியிடப்பட்டதில் எவ்வித விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து இம்மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கான மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு நிலை குறித்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.இனியாவது மாநில சுகாதாரத்துறை விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தாமதம் இல்லாமல் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story