மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று + "||" + In Salem district, the incidence of corona has crossed 10,000 and 432 people have been infected in a single day

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்புகளும் தினமும் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 437 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 432 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 241 பேர், கெங்கவல்லியில் 34 பேர், ஆத்தூரில் 21 பேர், ஓமலூரில் 19 பேர், எடப்பாடியில் 18 பேர், தலைவாசலில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 13 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 11 பேர், வாழப்பாடியில் 7 பேர், கொளத்தூர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேட்டூர், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மேச்சேரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நரசிங்கப்புரம், வாழவந்தி ஆகிய பகுதியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிஸ்சார்ஜ்

மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 5 பேர், கிருஷ்ணகிரி, கோவை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வந்த தலா 2 பேர், ராமநாதபுரத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 359 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதேபோல நாமக்கல்லில் 70 பேரும், தர்மபுரியில் 14 பேரும், கிருஷ்ணகிரியில் 40 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
2. நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பரிசோதனை
நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. நேற்று வந்தார். பின்னர் அவர், தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.
3. சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிப்பு 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
4. நாமக்கல், ராசிபுரத்தில் கொரோனா பரவலை தடுக்க நகை கடைகள் அடைப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாமக்கல், ராசிபுரத்தில் நகை கடைகள் அடைக்கப்பட்டன.
5. தர்மபுரி மாவட்டத்தில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.