தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரசாணை வெளியிட வலியுறுத்தி தொண்டி வட்டாணம் விலக்கு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி,
ராமநாதபுரம் கிழக்குமாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அரசாணை வெளியிட வலியுறுத்தி தொண்டி வட்டாணம் விலக்கு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில விவசாய அணி செயலாளர் துரை தவமணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட இணைச்செயலாளர் முனியசாமி, மாவட்ட பொருளாளர் சரவண பாண்டியன், ஒன்றிய மகளிர் அணி தலைவர் பிரியா, தொண்டி நகர பொறுப்பாளர் அஜித் பாண்டியன் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய தொண்டரணி செயலாளர் அன்பு பாண்டியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story