மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 9,058 பேருக்கு கொரோனா பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியது + "||" + The death toll in Corona Bangalore has crossed 2,000 with 9,058 newcomers in Karnataka

கர்நாடகத்தில் புதிதாக 9,058 பேருக்கு கொரோனா பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

கர்நாடகத்தில் புதிதாக 9,058 பேருக்கு கொரோனா பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 135 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 9,058 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று 9 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில் நேற்று மாநிலத்தில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது 9 ஆயிரத்து 58 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் நேற்று திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 135 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5,837 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் உயிரிழப்பு 2 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய கொரானா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 9 ஆயிரத்து 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 51 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 135 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் வைரசுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,837 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் 2,967 பேர்

புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 136 பேர், பல்லாரியில் 393 பேர், பெலகாவியில் 316 பேர், பெங்களூரு புறநகரில் 145 பேர், பெங்களூரு நகரில் 2,967 பேர், பீதரில் 63 பேர், சாம்ராஜ்நகரில் 49 பேர், சிக்பள்ளாப்பூரில் 106 பேர், சிக்கமகளூருவில் 210 பேர், சித்ரதுர்காவில் 164 பேர், தட்சிண கன்னடாவில் 352 பேர், தாவணகெரேயில் 289 பேர், தார்வாரில் 199 பேர், கதக்கில் 194 பேர், ஹாசனில் 461 பேர், ஹாவேரியில் 153 பேர், கலபுரகியில் 220 பேர், குடகில் 54 பேர், கோலாரில் 64 பேர், கொப்பலில் 195 பேர், மண்டியாவில் 197 பேர், மைசூருவில் 737 பேர், ராய்ச்சூரில் 245 பேர், ராமநகரில் 105 பேர், சிவமொக்காவில் 233 பேர், துமகூருவில் 327 பேர், உடுப்பியில் 161 பேர், உத்தரகன்னடாவில் 114 பேர், விஜயாப்புராவில் 67 பேர், யாதகிரியில் 142 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பாகல்கோட்டையில் 2 பேர், பல்லாரியில் 4 பேர், பெலகாவியில் 7 பேர், பெங்களூரு புறநகரில் 2 பேர், பெங்களூரு நகரில் 40 பேர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, தார்வார், கதக், ஹாவேரி, உடுப்பியில் தலா 2 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், தாவணகெரேயில் 4 பேர், ஹாசனில் 11 பேர், கலபுரகியில் 4 பேர், கொப்பலில் 4 பேர், மைசூருவில் 12 பேர், ராய்ச்சூரில் 3 பேர், சிவமொக்காவில் 10 பேர், துமகூருவில் 3 பேர், உத்தரகன்னடாவில் ஒருவர், விஜயாப்புராவில் 4 பேர், சாம்ராஜ்நகர், கோலார், மண்டியா, ராமநகர், யாதகிரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை

கர்நாடகத்தில் நேற்று 83 ஆயிரத்து 670 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 5,159 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 626 பேர் குணம் அடைந்துள்ளனர். 90 ஆயிரத்து 999 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 762 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி டெல்டாவில் 331 பேருக்கு தொற்று
தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள். டெல்டாவில் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. கரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று புன்செய் புகளூர் பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டது
கரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புன்செய்புகளூர் பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவருக்கு தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் பூட்டப்பட்டத.
3. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா மேலும் ஒருவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா அரியலூரில் 11 பேர் பாதிப்பு
பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் அரியலூரில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா அரியலூரில் 11 பேர் பாதிப்பு
பெரம்பலூரில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் அரியலூரில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.