ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மூடல்


ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மூடல்
x
தினத்தந்தி 1 Sep 2020 10:40 PM GMT (Updated: 1 Sep 2020 10:40 PM GMT)

3 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மூடப்பட்டது.

நெட்டப்பாக்கம்,

புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது வேகம் எடுத்து வருகிறது. நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள், தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அலுவலகத்தில் பணியாற்றும் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகம் மூடல்

இதற்கிடையில் நோய் பரவலை தடுக்கும் வகையில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை மூட சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மூடப்படுவதாக ஆணையர் மனோகர் அறிவித்தார். இதையடுத்து நேற்று முதல் அலுவலகம் மூடப்பட்டது.

மேலும் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தற்காலிகமாக செம்பியம்பாளையத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

Next Story