மாவட்ட செய்திகள்

கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு + "||" + Karnataka is making rapid progress in the field of education, said Governor Wajubai Wala

கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு

கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு
கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாகமுன்னேறி வருவதாககவர்னர் வஜூபாய்வாலா கூறியுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து கவர்னர் வஜூபாய் வாலா தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கவர்னர் வஜூபாய் வாலா பேசும்போது கூறியதாவது:-


கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது. அதிலும் தலைநகர் பெங்களூரு கல்வியின் குவிமையமாக திகழ்கிறது. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் ஆராய்ச்சி வளர்ச்சியில் பெங்களூரு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மூலம் பல்கலைக்கழகங்கள் பெரிய அளவில் சாதனை நிகழ்த்தும். அதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும். கர்நாடகம் உலக அளவில் போட்டி போடும் திறனை கொண்டுள்ளது. அதனால் துணைவேந்தர்கள் புதிய கல்வி கொள்கையை ஒரு சவாலாக எடுத்து பணியாற்ற வேண்டும். அடுத்து வரும் காலத்தில் உயர்கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ உள்ளது.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

பணியாளர்கள் நியமனம்

இதில் அஸ்வத் நாராயண் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இதற்காக புதிய சட்டத்தை உருவாக்குவது மற்றும் இதர ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. இதற்காக ஒரு அறிக்கையை தயாரிக்கும் பணியில் தனிக்குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குழு அறிக்கை வழங்கியதும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் பணிகள் தொடங்கும்.

கர்நாடகம் மட்டுமின்றி, நாட்டின் போக்கையே மாற்றக்கூடிய வல்லமை இந்த புதிய கல்வி கொள்கைக்கு உண்டு. இதில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது ஆகும். பணியாளர்கள் நியமனம் உள்பட அனைத்து வசதிகளும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும். உயர்கல்வியில் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த அம்சங்களை மாநில அரசே வழங்கும். அதன் அடிப்படையில் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட துணைவேந்தர்கள், புதிய கல்வி கொள்கையை சிறப்பான முறையில் அமல்படுத்த நிர்வாக, கல்வி மற்றும் நிதி தன்னாட்சி அதிகாரத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி சித்தராமையா பேச்சு
நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
2. மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழா: கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் தேசிய கல்வி கொள்கை
கல்வித்துறையின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்று மைசூரு பல்கலைக்கழக நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
3. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவிகள் செய்யப்படும் உத்தவ் தாக்கரே பேச்சு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் முடிந்த எல்லா வழிகளிலும் உதவிகள் செய்யப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
4. கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் மந்திரி ஈசுவரப்பா பேச்சு
கர்நாடகத்தில் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
5. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்படு கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.