கர்நாடகத்தில் வைரஸ் பாதிப்பில் புதிய உச்சம் ஒரே நாளில் 9,860 பேருக்கு கொரோனா மேலும் 113 பேர் உயிரிழப்பு


கர்நாடகத்தில் வைரஸ் பாதிப்பில் புதிய உச்சம் ஒரே நாளில் 9,860 பேருக்கு கொரோனா மேலும் 113 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Sept 2020 5:18 AM IST (Updated: 3 Sept 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 9,860 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில் வைரஸ் தொற்றுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ்

மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 51 ஆயிரத்து 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா பரிசோதனையை கர்நாடக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று மட்டும் கர்நாடகத்தில் 9,860 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

9,860 பேருக்கு வைரஸ்

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 51 ஆயிரத்து 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 9,860 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மாநிலத்தில் புதிதாக 113 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 32 பேர் இறந்துள்ளனர். மைசூருவில் 11 பேரும், தார்வாரில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் 3,420 பேர்

புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 166 பேர், பல்லாரியில் 433 பேர், பெலகாவியில் 470 பேர், பெங்களூரு புறநகரில் 146 பேர், பெங்களூரு நகரில் 3,420 பேர், பீதரில் 62 பேர், சாம்ராஜ்நகரில் 67 பேர், சிக்பள்ளாப்பூரில் 100 பேர், சிக்கமகளூருவில் 117 பேர், சித்ரதுர்காவில் 174 பேர், தட்சிண கன்னடாவில் 414 பேர், தாவணகெரேயில் 321 பேர், தார்வாரில் 327 பேர், கதக்கில் 195 பேர், ஹாசனில் 290 பேர், ஹாவேரியில் 149 பேர், கலபுரகியில் 194 பேர், குடகில் 25 பேர், கோலாரில் 83 பேர், கொப்பலில் 282 பேர், மண்டியாவில் 245 பேர், மைசூருவில் 667 பேர், ராய்ச்சூரில் 232 பேர், ராமநகரில் 59 பேர், சிவமொக்காவில் 342 பேர், துமகூருவில் 357 பேர், உடுப்பியில் 169 பேர், உத்தரகன்னடாவில் 126 பேர், விஜயாப்புராவில் 122 பேர், யாதகிரியில் 106 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் நேற்று 73 ஆயிரத்து 317 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரத்து 913 பேர் குணம் அடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 6,287 பேர் அடங்குவர். 94 ஆயிரத்து 459 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 9,860 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story