போதைப்பொருள் விவகாரம்: நடிகை ராகிணி திவேதி இன்று நேரில் ஆஜராக போலீசார் கெடு நண்பரான அரசு ஊழியர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி இன்று நேரில் ஆஜராக போலீசார் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அவருடைய நண்பரான அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக 3 பேரும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்தும் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதாவது பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று காலையில் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே நடிகை ராகிணி திவேதி சார்பில், அவரது வக்கீல் போலீசாரை சந்தித்து பேசி விசாரணைக்கு அவர் ஆஜராக முடியாத காரணம் குறித்து விளக்கம் அளித்தார். அதாவது சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் வக்கீல் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில் நடிகை ராகிணி திவேதியும் தனது டுவிட்டர் பதிவில், “போலீஸ் விசாரணைக்கு தன்னால் ஆஜராக முடியவில்லை. அதற்கு பதிலாக எனது வக்கீல் போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் வருகிற திங்கட்கிழமை போலீஸ் விசாரணைக்கு ஆஜராவேன்” என்று கூறி இருந்தார்.
மேலும் அவர் வெளியிட்டு இருந்த மற்றொரு டுவிட்டர் பதிவில், “ஒரு குடிமகளாக நான் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவேன். போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். நான் தலைமறைவாகவில்லை. எனக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகி இந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை என்பதை நிரூபிப்பேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால் நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் கேட்டு இருப்பதை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிராகரித்து இன்று (வெள்ளிக்கிழமை) கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இன்று நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே, கன்னட திரைஉலகில் போதைப்பொருட்கள் சப்ளை செய்ததில் சில தொழில்அதிபர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதாவது தொழில்அதிபர்கள் மூலமாக நடிகைகள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகை ராகிணி திவேதியின் நெருங்கிய நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. ரவிசங்கர் பெங்களூரு ஜெயநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின் போது போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்தியதில் ரவி சங்கருக்கு தொடர்பு இருப்பது பற்றி முக்கிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று மதியம் ரவி சங்கரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, நேற்று மாலையில் காணொலி காட்சி மூலமாக நீதிபதி முன்னிலையில் ரவி சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் போலீசார் கேட்டனர். ஆனால் ரவி சங்கரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக கடந்த ஆண்டு(2019) பெங்களூரு நகரில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் ரவி சங்கருடன், நடிகை ராகிணி திவேதியும் கலந்து கொண்டு இருந்தார். அப்போது சிவபிரகாஷ் என்பவருக்கும், ரவி சங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு இருந்தனர். அந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் ரவி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல, கன்னட பிரபல நடிகையான சஞ்சனா கல்ராணியின் நண்பரான ராகுலையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராகுலும் தொழில்அதிபர் ஆவார். போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் ராகுலுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரை பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும், ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று, இந்த விவகாரத்தில் பெங்களூருவில் ஓட்டல் அதிபராக இருந்து வரும் கார்த்திக் ராஜ் என்பவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். கன்னட திரை உலகத்தினருடன், கார்த்திக் ராஜிக்கு உள்ள தொடர்பு, போதைப்பொருட்கள் பயன்படுத்தியதில் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

Related Tags :
Next Story