திடீரென எகிறிய பாதிப்பு மும்பையில் புதிதாக 1,929 பேருக்கு கொரோனா தொற்று


திடீரென எகிறிய பாதிப்பு மும்பையில் புதிதாக 1,929 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 Sept 2020 12:30 AM IST (Updated: 5 Sept 2020 12:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புதிதாக 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இதில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென எகிறியது. அதன்படி புதிதாக 1,929 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 24 ஆகி உள்ளது. இதில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 671 குணமடைந்து உள்ளனர். தற்போது 22 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

35 பேர் பலி

நகரில் ஆட்கொல்லி நோய்க்கு மேலும் 35 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 799 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 80 ஆக உள்ளது. நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 77 நாட்களாக உள்ளது. தாராவியில் நேற்று புதிதாக 10 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 ஆகி உள்ளது.

Next Story