புதிதாக 9,280 பேருக்கு தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியது மேலும் 116 பேர் பலி
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியது. புதிதாக 9,280 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் மேலும் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 9,280 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 116 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு மரணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,170 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 98 பேர், பல்லாரியில் 447 பேர், பெலகாவியில் 278 பேர், பெங்களூரு புறநகரில் 204 பேர், பெங்களூரு நகரில் 2,963 பேர், பீதரில் 36 பேர், சாம்ராஜ்நகரில் 56 பேர், சிக்பள்ளாப்பூரில் 206 பேர், சிக்கமகளூருவில் 223 பேர், சித்ரதுர்காவில் 92 பேர், தட்சிண கன்னடாவில் 428 பேர், தாவணகெரேயில் 263 பேர், தார்வாரில் 297 பேர், கதக்கில் 186 பேர், ஹாசனில் 340 பேர், ஹாவேரியில் 149 பேர், கலபுரகியில் 226 பேர், குடகில் 44 பேர், கோலாரில் 86 பேர், கொப்பலில் 154 பேர், மண்டியாவில் 168 பேர், மைசூருவில் 776 பேர், ராய்ச்சூரில் 169 பேர், ராமநகரில் 73 பேர், சிவமொக்காவில் 350 பேர், துமகூருவில் 424 பேர், உடுப்பியில் 187 பேர், உத்தரகன்னடாவில் 178 பேர், விஜயாப்புராவில் 85 பேர், யாதகிரியில் 94 பேர் உள்ளனர்.
பெங்களூரு நகரில் 25 பேர் சாவு
கொரோனாவுக்கு நேற்று மட்டும் பெங்களூருவில் 25 பேர், பல்லாரியில் 8 பேர், பெலகாவியில் 6 பேர், பெங்களூரு புறநகரில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், தாவணகெரே, தார்வாரில் தலா 10 பேர், மைசூருவில் 11 பேர், சிவமொக்காவில் 6 பேர், துமகூருவில் 4 பேர் உள்பட மொத்தம் 116 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் நேற்று 73 ஆயிரத்து 192 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 31 லட்சத்து 97 ஆயிரத்து 110 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதுவரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 196 பேர் குணம் அடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 6,161 பேர் அடங்குவர். 99 ஆயிரத்து 101 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 785 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4 லட்சத்தை நெருங்கியது
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பில் தேசிய அளவில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. இதே வேகத்தில் சென்றால் 3-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை இந்த மாத இறுதிக்குள் கர்நாடகம் முந்தி சென்று 3-வது இடத்தை பிடிக்கும் நிலை உள்ளது. மாநிலத்தில் நேற்றைய பாதிப்புடன் வைரஸ் தொற்று பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.

Related Tags :
Next Story