ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவால் ஒருவர் இறந்துள்ளார்.
ஈரோடு,
பெருந்துறை பகுதியை சேர்ந்த 72 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் காரணமாக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்துள்ளது.
141 பேருக்கு கொரோனா
நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 587 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 43 வயதுடைய ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஏட்டு (தலைமை காவலர்) உள்பட மாநகராட்சி பகுதியில் மட்டும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை
மேலும் கோபி மற்றும் பெருந்துறை பகுதிகளை சேர்ந்த தலா 10 பேருக்கும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 9 பேருக்கும், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், சென்னிமலை பகுதியை சேர்ந்த 7 பேருக்கும், சித்தோடு மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த தலா 4 பேருக்கும், நம்பியூர், கொடுமுடி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும், அந்தியூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அதே நேரம் நேற்று ஒரே நாளில் 60 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,228 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 46 பேர் இறந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 454 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

Related Tags :
Next Story