மராட்டியத்தில் நாள்தோறும் புதிய உச்சம் ஒரே நாளில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா மொத்த பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது
மராட்டியத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 23 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நோய் பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 23 ஆயிரத்து 350 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர்.
9 லட்சத்தை தாண்டியது
கடந்த 4 நாளில் மட்டும் மாநிலத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக மாநிலத்தில் இதுவரை தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை மாநிலத்தில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 400 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 லட்சத்து 35 ஆயிரத்து 857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் மேலும் 328 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 604 ஆக உயர்ந்து உள்ளது.
71.03 சதவீதம் பேர் குணம்
மராட்டியத்தில் இதுவரை 46 லட்சத்து 47 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.52 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல நோய் பாதித்தவர்களில் 71.03 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 2.93 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது 14 லட்சத்து 96 ஆயிரத்து 72 பேர் வீடுகளிலும், 38 ஆயிரத்து 509 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல மாநிலத்தில் நேற்று நாசிக் மாநகராட்சியில் 1,146 பேரும், கோலாப்பூரில் 1,171 பேரும், நாக்பூர் மாநகராட்சியில் 1,518 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story