மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் சஞ்சய் ராவத் வலியுறுத்தல்


மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Sept 2020 1:10 AM IST (Updated: 7 Sept 2020 1:10 AM IST)
t-max-icont-min-icon

மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக தெரிவித்து இருந்தார். நடிகையின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் நடிகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில் நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா மூத்த எம்.பி. சஞ்சய் ராவுத் வலியுறுத்தி உள்ளார்.

மன்னிப்பு கேட்க சொல்லுவேன்

இதுகுறித்து அவர் கூறுகையில், “இங்கு வசித்து கொண்டு, வேலைபார்த்து கொண்டு யாராவது மும்பை, மராட்டியம் மற்றும் மராத்தியர்கள் குறித்து தவறாக பேசினால், முதலில் நான் அவர்களை மன்னிப்பு கேட்க சொல்லுவேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக மும்பை போலீசாரை அவதூறாக பேசுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை சஞ்சய் ராவத் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story