ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி ஒரே நாளில் 118 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும், ஒரே நாளில் 118 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 842 ஆக உயர்ந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ரங்கம்பாளையம், எஸ்.கே.சி.ரோடு, திண்டல், சோலார்புதூர், மேற்கு பெருமாள் கோவில் வீதி, கருங்கல்பாளையம், சூரம்பட்டிவலசு, பெரியசேமூர், தெற்குபுதுப்பாளையம், ஓடக்காட்டு தோட்டம், கொல்லம்பாளையம், சூரம்பட்டி நால்ரோடு, நேதாஜிரோடு, வீரப்பன்சத்திரம், கள்ளுக்கடைமேடு, மாணிக்கவாசகர் காலனி, சாஸ்திரிநகர், அம்பேத்கர்வீதி, மாணிக்கம்பாளையம், பாப்பாத்திக்காடு, முனிசிபல்காலனி, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம், வெட்டுக்காட்டுவலசு, ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரஹாரம், குமரன்நகர், எம்.ஜி.ஆர். வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்
இதேபோல் சென்னிமலை மேற்கு ராஜ வீதி, கே.ஜி.வலசு, வெள்ளோடு கவுண்டச்சிபாளையம், கொடுமுடி இச்சிபாளையம், சிவகிரி, தாமரைபாளையம், சித்தோடு தயிர்பாளையம், பெருந்துறை ஸ்ரீதேவி வீதி, பவானி போலீஸ் நிலையம், காமாட்சியம்மன் கோவில் பகுதி, சலங்கபாளையம், கவுந்தப்பாடி கிருஷ்ணாபுரம், பாலப்பாளையம், அந்தியூர் தவிட்டுப்பாளையம், ஆப்பக்கூடல் குளத்துக்கரை, கோபிசெட்டிபாளையம் வரதன் வீதி, கருமாயா வீதி, ஒத்தக்குதிரை, கரட்டுப்பாளையம், நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதி, சி.எஸ்.ஐ. வீதி, குருமந்தூர், டி.என்.பாளையம், புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர், சத்தியமங்கலம் ராஜா வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று ஒரே நாளில் 191 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 645 பேர் குணமடைந்து உள்ளார்கள். 1,147 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
4 பேர் பலி
கொரோனாவுக்கு மாவட்டத்தில் 46 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் பலியானார்கள். இதில் பெருந்துறை அருகே சீனாபுரத்தை சேர்ந்த 53 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 31-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் கடந்த 3-ந் தேதியும், கருங்கல்பாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர் 4-ந் தேதியும், அம்மாபேட்டையை சேர்ந்த 47 வயது ஆண் நேற்று முன்தினமும் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Related Tags :
Next Story