மும்பை மாநகராட்சியினர் எனது அலுவலகத்தை இடிக்கலாம் நடிகை கங்கனா ரணாவத் அச்சம்


மும்பை மாநகராட்சியினர் எனது அலுவலகத்தை இடிக்கலாம் நடிகை கங்கனா ரணாவத் அச்சம்
x
தினத்தந்தி 8 Sept 2020 12:59 AM IST (Updated: 8 Sept 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சியினர் எனது அலுவலகத்தை இடிக்கலாம் என நடிகை கங்கனா ரணாவத் அச்சம் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்த வரிசையில் சமீபத்தில் அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகையின் கருத்துக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் நடிகையும், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தை இடிப்பார்கள்

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தனது அலுவலகத்தை இடித்துவிடுவார்கள் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அவர்கள் (மாநகராட்சியினர்) அத்துமீறி எனது அலுவலகத்தை அளந்து உள்ளனர். எனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லை கொடுத்து உள்ளனர். நான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன். நாளை அவர்கள் எனது சொத்தை இடிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story