தூண்டில் வளைவு அமைப்பது குறித்துமணப்பாடு கடலில் படகில் சென்று கனிமொழி எம்.பி ஆய்வு
தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மணப்பாடு கடலில் நேற்று படகில் சென்று கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மணப்பாடும் ஒன்றாகும். இங்கு ஏராளமான மீனவர்களும் உள்ளனர். இந்த பகுதியில் கடலில் மணல் திட்டு உருவாகி மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் மணல் திட்டை அகற்றி தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கனிமொழி எம்.பி.யை சந்தித்த மீனவர்கள், நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூறி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கனிமொழி எம்.பி. ஆய்வு
இந்த நிலையில் நேற்று மாலையில் கனிமொழி எம்.பி. மணப்பாடு பகுதிக்கு வந்தார். அவர் அங்கு படகில் ஏறி கடலில் சிறிது தூரம் சென்று, மணல் திட்டுகள் ஏற்பட்டு உள்ள பகுதியை பார்வையிட்டார். மேலும், தூண்டில் வளைவு அமைப்பதற்கு மீனவர்கள் வலியுறுத்தி உள்ள பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story