கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம்


கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2020 10:54 PM IST (Updated: 8 Sept 2020 10:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அனைத்து கட்சி விவசாயிகள் சங்கம் சார்பில் பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.

கோவில்பட்டி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட் கள் அவசர சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விலை உத்தரவாத வேளாண் சேவை மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களை எதிர்த்து அனைத்து கட்சி விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் இருந்து பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.

கோஷங்கள்

கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தி.மு.க. விவசாய அணி மாவட்ட செயலாளர் ராமர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மத்திய பா.ஜனதா அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து பிரதமருக்கு மனுக் களை அனுப்பினர்.

Next Story