வழிபாட்டு தலங்களை திறக்க சாத்தியம் இல்லை ஜகோர்ட்டில் அரசு தகவல்


வழிபாட்டு தலங்களை திறக்க சாத்தியம் இல்லை ஜகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2020 12:53 AM IST (Updated: 9 Sept 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது என்று ஐகோர்ட்டில் அரசு தெரிவித்தது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டாலும், வழிபாட்டு தலங்கள் 5 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டே இருக்கிறது. வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி பா.ஜனதா மற்றும் பிரகாஷ் அம்பேத்கரின் கட்சியும் போராட்டம் நடத்தியது.

இந்தநிலையில் கோவில்களை திறக்க உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று மனுதாக்கல செய்து இருந்தது. இந்த மனு நீதிபதி அஜ்மத் செய்யது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சாத்தியம் இல்லாதது

அப்போது மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு செயலாளர் கிஷோர் நிம்பால்கர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள அறிக்கையில், ‘‘வழிபாட்டு தலங்களை திறந்தால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும். அரசிடம் உள்ள குறைந்தபட்ச வளங்களை வைத்து கொண்டு நோய் பரவல் கட்டுபடுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும். கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் வழிபாட்டு தலங்களை திறப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாது’’ என கூறப்பட்டுள்ளது.

Next Story