மாவட்ட செய்திகள்

திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை + "||" + Trichy At the Housing Board office In order to pick up the tender Forget the social gap Concentrated Contractors

திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை

திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை
திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
திருச்சி,

திருச்சி காஜாமலை காலனியில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர்பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு உள்ள மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்துவதற்காக ரூ.29 லட்சம் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டு இருந்தது.


இந்த டெண்டருக்கான படிவங்களை 110 பேர் வாங்கி சென்றிருந்தனர். டெண்டர் பெட்டி செப்டம்பர் 8-ந்தேதி மாலை 3 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், திருச்சி மாவட்டத்தில் இருந்தும் வந்திருந்த ஏராளமான ஒப்பந்ததாரர்கள் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தின் முன் கூடி நின்றனர்.

அவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் நின்று கொண்டிருந்தனர். இதனால் கே.கே.நகர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். வீட்டுவசதி வாரிய அலுவலகத்தின் 2 கேட்களும் இழுத்து மூடப்பட்டன. போலீசார் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் வெளியே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து குழு குழுவாக கூடிநின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால் அவசர சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் ஒப்பந்ததாரர்கள் அதனை பொருட்படுத்தாமல் மாலை வரை அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் பயங்கரம்: 1 பவுன் நகைக்காக மூதாட்டி படுகொலை
திருச்சியில் 1 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
2. திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் - ஐ.ஜி. ஜெயராம் தகவல்
திருச்சி மத்திய மண்டலத்தில் 476 புதிய ரவுடிகள் உள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அவர்களுக்காக சரித்திர பதிவேடு துவங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
3. திருச்சி அருகே இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம்
திருச்சி அருகே சீராத்தோப்பில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
4. பெரியார் சிலை அவமதிப்பு: சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பன்னீர் செல்வம்
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான, சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5. திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின்
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.