புதிதாக 9,540 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,808 ஆக உயர்வு
கர்நாடகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,808 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 9,540 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 9,540 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 128 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,808 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக வைரஸ் பாதித்தோரில், பாகல்கோட்டையில் 219 பேர், பல்லாரியில் 559 பேர், பெலகாவியில் 390 பேர், பெங்களூரு புறநகரில் 79 பேர், பெங்களூரு நகரில் 3,419 பேர், பீதரில் 59 பேர், சாம்ராஜ்நகரில் 60 பேர், சிக்பள்ளாப்பூரில் 141 பேர், சிக்கமகளூருவில் 73 பேர், சித்ரதுர்காவில் 94 பேர், தட்சிண கன்னடாவில் 310 பேர், தாவணகெரேயில் 255 பேர், தார்வாரில் 226 பேர், கதக்கில் 155 பேர், ஹாசனில் 270 பேர், ஹாவேரியில் 169 பேர், கலபுலரகியில் 241 பேர், குடகில் 60 பேர், கோலாரில் 97 பேர், கொப்பலில் 150 பேர், மண்டியாவில் 224 பேர், மைசூருவில் 500 பேர், ராய்ச்சூரில் 214 பேர், ராமநகரில் 109 பேர், சிவமொக்காவில் 555 பேர், துமகூருவில் 242 பேர், உடுப்பியில் 258 பேர், உத்தரகன்னடாவில் 260 பேர், விஜயாப்புராவில் 57 பேர், யாதகிரியில் 95 பேர் உள்ளனர்.
128 பேர் பலி
கொரோனாவுக்கு பல்லாரியில் 8 பேர், துமகூரு, பெலகாவியில் 5 பேர், பெங்களூரு நகரில் 41 பேர், கொப்பல், சிவமொக்கா, தட்சிண கன்னடாவில் 6 பேர், மைசூருவில் 13 பேர் உள்பட 128 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 70 ஆயிரத்து 322 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 6,860 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்து 433 ஆகும். 99 ஆயிரத்து 470 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 776 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story