கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்த சர்க்கரை ஆலை நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்தநிலையில் புதுவை சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி, மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கூட்டுறவுத் துறை செயலர் அசோக்குமார், சிறப்பு செயலர் ஸ்மிதா, வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி விஜயன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து அவர்களிடம் அறிக்கை கேட்டோம். அந்த குழுவும் சர்க்கரை ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
அதில் சர்க்கரை ஆலை லாபகரமாக இயங்க முடியாது. எனவே மில்லை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு மில்லின் வங்கி கடனை அடைக்கலாம் என கூறியது. இதற்கிடையே சட்டபையில் அந்த சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் திறக்க நடவடிக்கை
புதுவை மாநிலத்தில் உள்ள அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் ரூ.876 கோடி ஒதுக்கியுள்ளோம். ஆனால் அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் பேசும் போது குறிப்பிட்ட பணத்தை கொடுத்தால் மில்லை இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் வரும் வாரத்தில் கூட்டுறவு அதிகாரிகள், விவசாயிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளோம். அதில் கூறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மில்லை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் தற்போது உள்ள அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. புதுவை மாநிலத்தில் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கினால் மின்சார உற்பத்தி, எத்தினால் உற்பத்தி மற்றும் வடிசாராயம் தயாரிக்கும் தொழிற்சாலையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது தான் லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலையை லாபகரமாக இயக்க முடியும். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story