திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 296 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 296 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2020 3:53 AM IST (Updated: 11 Sept 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். நேற்று ஒரே நாளில் 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 27 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 890 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 67 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 459 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 64 வயது, முதியவர், 54 வயது பெண், 23 வயது இளம்பெண், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர் நடேசன் தெருவில் வசிக்கும் 25 வயது வாலிபர், கூடுவாஞ்சேரி பெரிய தெருவை சேர்ந்த 58 வயது ஆண், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம், கன்னிவாக்கம், ஆலப்பாக்கம், பகுதியில் வசிக்கும் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 507 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 26 ஆயிரத்து 658 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 380 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 11, வயது சிறுவன் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 36, 29, 38, 23, வயதுடைய ஆண்கள் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த 25 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 173 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 967 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 440 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்தது. 1,249 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story