தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது நெல்லை, தென்காசியில் 187 பேருக்கு தொற்று


தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது நெல்லை, தென்காசியில் 187 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 11 Sept 2020 4:03 AM IST (Updated: 11 Sept 2020 4:03 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது. நெல்லை, தென்காசியில் புதிதாக 187 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 43 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 13 பேர். இதுதவிர அம்பை, பாப்பாக்குடி, ராதாபுரம், சேரன்மாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது. கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், கடையம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றிலும் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தென்காசி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 92 ஆக உயர்ந்து உள்ளது.

12 ஆயிரத்தை தாண்டியது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 12 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 ஆயிரத்து 240 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 708 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 118 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story