தாராவியில் மீண்டும் புதிய உச்சம் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு


தாராவியில் மீண்டும் புதிய உச்சம் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Sept 2020 2:16 AM IST (Updated: 12 Sept 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் மீண்டும் புதிய உச்சமாக ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவியது. அதன்பிறகு அங்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. நாள்தோறும் 10-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டனர். இதை உலக சுகாதார அமைப்பே பாராட்டி இருந்தது.

இதற்கிடையே சமீபகாலமாக தாராவி பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கடை வீதிகளில் சுற்றி திரிவதை காண முடிகிறது. மேலும் பலர் முககவசம் கூட அணியாமல் வெளியில் நடமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் புதிய உச்சமாக தாராவியில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

124 பேருக்கு சிகிச்சை

சுமார் 2 மாதங்களுக்கு பிறகு தாராவியில் ஒரே நாளில் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 883 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 124 ஆக எகிறி உள்ளது.

இதேபோல நேற்று தாதரில் 33 பேருக்கும், மாகிமில் 39 பேருக்கும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 2 ஆயிரத்து 916, 2 ஆயிரத்து 614 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story