நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 287 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 287 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Sept 2020 6:24 AM IST (Updated: 12 Sept 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 4 போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வள்ளியூர், கூடங்குளம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றக்கூடிய 4 போலீஸ்காரர்கள், கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் 2 பேர் உள்பட 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 910 ஆக அதிகரித்து உள்்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,124 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 192 பேர் இறந்து உள்ளனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 142 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 5 ஆயிரத்து 466 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 563 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 113 பேர் இறந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 12 ஆயிரத்து 167 ஆக உயர்ந்தது. இதில் 11 ஆயிரத்து 339 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 770 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் இதுவரை 118 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story