கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 4½ லட்சத்தை நெருங்குகிறது மேலும் 94 பேர் சாவு
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 9 ஆயிரத்து 140 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4½ லட்சத்தை நெருங்குகிறது. மேலும் 94 பேர் இறந்து உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 40 ஆயிரத்து 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 9,140 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 511 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4½ லட்சத்தை நெருங்குகிறது. அதே போல் கொரோனாவுக்கு மேலும் 94 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,161 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 175 பேர், பல்லாரியில் 366 பேர், பெலகாவியில் 201 பேர், பெங்களூரு புறநகரில் 211 பேர், பெங்களூரு நகரில் 3,552 பேர், பீதரில் 101 பேர், சாம்ராஜ்நகரில் 60 பேர், சிக்பள்ளாப்பூரில் 101 பேர், சிக்கமகளூருவில் 159 பேர், சித்ரதுர்காவில் 227 பேர், தட்சிண கன்னடாவில் 401 பேர், தாவணகெரேயில் 267 பேர், தார்வாரில் 239 பேர், கதக்கில் 49 பேர், ஹாசனில் 324 பேர், ஹாவேரியில் 213 பேர், கலபுரகியில் 222 பேர், குடகில் 27 பேர், கோலாரில் 53 பேர், கொப்பலில் 183 பேர், மண்டியாவில் 193 பேர், மைசூருவில் 637 பேர், ராய்ச்சூரில் 131 பேர், ராமநகரில் 81 பேர், சிவமொக்காவில் 155 பேர், துமகூருவில் 304 பேர், உடுப்பியில் 169 பேர், உத்தரகன்னடாவில் 130 பேர், விஜயாப்புராவில் 58 பேர், யாதகிரியில் 151 பேர் உள்ளனர்.
9,557 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 21 பேர், மைசூருவில் 14 பேர், தார்வாரில் 9 பேர், பல்லாரியில் 8 பேர் உள்பட 94 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 63 ஆயிரத்து 583 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஒரே நாளில் 9 ஆயிரத்து 557 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் இதுவரை 3 லட்சத்து 44 ஆயிரத்து 556 பேர் குணம் அடைந்து உள்ளனர். 97 ஆயிரத்து 815 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 795 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story