மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது + "||" + The number of corona experiments is close to one million

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது
புதுவையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.


நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 792 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 419 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 455 பேர் குணமடைந்து உள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்தை நெருங்கியது

அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சுல்தான்பேட்டையை சேர்ந்த 42 வயது ஆணும், கன்னியக்கோவிலை சேர்ந்த 71 வயது முதியவரும், ஜிப்மரில் புதுவை காமராஜ் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த 61 வயது முதியவரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் ஊசுடு புதுநகரை சேர்ந்த 60 வயது முதியவரும் திருநள்ளாறு சுப்ராயபுரம் ரோட்டை சேர்ந்த 64 வயது முதியவரும் பலியானார்கள்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 95 ஆயிரத்து 919 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவர்களில் 74 ஆயிரத்து 136 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1.90 சதவீதம்

அவர்களில் 4 ஆயிரத்து 831 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,776 ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 55 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 370 பேர் இறந்துள்ளனர்.

அவர்களில் 316 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 20 பேர் காரைக்காலையும், 34 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு 1.90 சதவீதமாகவும், குணமடைவது 73.24 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 67 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 4 பேர் பலியானார்கள்.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று 9-வது நாளாக பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
4. மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு
மாகி பிராந்தியத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5. கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா மேலும் 66 பேர் சாவு
கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 66 பேர் இறந்துள்ளனர்.