மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தல் + "||" + Former Prime Minister Kumaraswamy insists there should be no political interference in the drug trial

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தல்

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தல்
போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில் எந்தவித இடையூறும் இல்லாமல் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையையும், இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். போதைப்பொருள் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். குறிப்பாக விசாரணைக்கு, அரசியல் தலையீடு உள்ளிட்ட எந்த விதமான இடையூறுகளும் ஏற்படக்கூடாது. போதைப்பொருள் விவகாரத்தில் சூதாட்ட விடுதி (கேசினோ) பற்றி அதிகஅளவில் பேச்சு அடிபடுகிறது. நமது மாநிலத்தில் சூதாட்ட விடுதிகள் இல்லை.


ஆனால் நமது மாநிலத்தில் இரவு நேர விருந்து நடைபெற்று வருகிறது. பெங்களூரு நகரில் நள்ளிரவு 12 மணியளவில் எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றால், நாம் இந்தியாவில் தான் வசிக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்படும். அந்த அளவுக்கு எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதியில் இரவு விருந்து நடக்கிறது.

திசை திருப்ப முயற்சி

ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ, கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. நான் உள்பட ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் இலங்கைக்கு சென்றது உண்மைதான். நாங்கள் சென்ற நோக்கம் வேறு. அதுக்கும், போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய நண்பர் இலங்கைக்கு சென்றது குறித்து தற்போது எதற்காக தெரிவித்தார் என்பது தெரியவில்லை. இலங்கைக்கு நான் சென்றிருப்பதை கூறினால், வழக்கு விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கலாம் என்பதற்காகவும் கூறி இருக்கலாம்.

நான் முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். இதற்காக போலீசாருக்கு முழு அதிகாரம் கொடுத்திருந்தேன். இரவு நேரங்களில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளை கண்காணிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தேன். போலீசாரும் சட்டவிரோதமாக நடைபெற்ற இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளுக்கு கடிவாளம் போட்டு இருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள கல்வி மந்திரி பதவி விலக வலியுறுத்தல்; காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் கல்வி மந்திரி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
2. பெரம்பலூரில் சந்தைகள்- காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூரில் உழவர் சந்தை, வாரச்சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
3. வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
வனத்துறையினரை தாக்கியவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் வனத்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்.
4. விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்
விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
5. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்
வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.