மாவட்ட செய்திகள்

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு + "||" + Increase in water opening from Mettur dam for Cauvery delta irrigation

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.


இந்த நிலையில் கடந்த வாரம் டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதிகரிப்பு

இந்த நிலையில் தற்போது மழை பொழிவு நின்றதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.37 அடியாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 111 நூலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
3. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
4. சென்னையில் நாளை மதுக்கடைகள் திறப்பு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வழங்கப்படும்
சென்னையில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனை நடைபெறும் என்றும், ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3.30 லட்சம் தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் யாதகிரி-ராய்ச்சூர் இடையே போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது.