அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 16 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 16 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,289 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 2,395 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
37 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 857 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 386 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Tags :
Next Story