மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு + "||" + Farmers petition to Collector to divert surplus water from Cauvery River to Chidambaram Lake

காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பிவிட வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம் சித்தாம்பூர் பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் தலைமையில் விவசாயிகள் நேற்று திருச்சி கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


காவிரி கொடுந்துறை பாசன வாய்க்கால் வழியாக வரும் உபரிநீர் மழைக்காலங்களில் அய்யாற்றில் வீணாக செல்கிறது. அந்த உபரிநீர் செல்ல அய்யாற்றில் இருகரைக்கும் ஒரு சைமன் (கீப்போக்கி பாலம்) இருந்தது. அதில் அதிக அளவில் தண்ணீர் வந்து உடைந்து விட்டது.

எனவே, அய்யாற்றில் ஒரு சைமன் அமைத்து, காவிரி உபரிநீரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு சென்றால், சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.ஆகவே, வீணாக செல்லும் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மில் தொழிலாளர்கள்

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள கே.கள்ளிக்குடியில் தனியார் மில் செயல்பட்டு வருகிறது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கே.கள்ளிக்குடியில் இயங்கி வந்த தனியார் மில், நலிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. அதை விற்று தனியார் நிறுவனம் ஒன்று, தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை கொடுப்பதாக உறுதி அளித்தது.

ஆனால், தற்போது அந்த மில்லும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. எனவே, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா குறித்து மாறுபட்ட சான்றிதழ்: கணவனை இழந்த பெண் 3 குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு
கொரோனா குறித்து மாறுபட்ட சான்றிதழ்: கணவனை இழந்த பெண் 3 குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு.
2. பாதையை அடைத்ததால் வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்து கிராம மக்கள் மனு
கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை அடுத்த கடமன்ரேவு கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கிராம வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
3. நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
போதுமான அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கழுமலை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அலுவலக நுழைவு வாயில் கேட்டை பூட்டினர்.
5. புலியூர் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மாற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
புலியூர் அருகே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக்கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.