மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கு: 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி + "||" + Ramanathapuram youth murder case: Court allows 3 to be questioned in police custody

ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கு: 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கு: 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
ராமநாதபுரம் வாலிபர் அருண்பிரகாஷ் கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (வயது24), மற்றும் வசந்தநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் யோகேஸ்வரன் (20) ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டனர். அதில் அருண்பிரகாஷ் பலியானார். யோகேஸ்வரன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 12 பேரை தேடிவந்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் பாம்பூரணி பகுதியை சேர்ந்த சலீம் சேட் என்பவரின் மகன் வாபா என்ற ரசாக்அலி (வயது23) என்பவர் கடலாடி கோர்ட்டிலும், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வைகை நகரை சேர்ந்த முருகன் மகன் வெள்ளை சரவணன் என்ற சரவணக்குமார் (24) மற்றும் வைகை நகர் செல்வராஜ் மகன் விஜய் என்ற எலி (22) ஆகியோர் அருப்புக்கோட்டை கோர்ட்டிலும் கடந்த 3-ந் தேதி சரணடைந்தனர்.

விசாரணை

இவர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் மேற்கண்ட 3 பேரையும் 16-ந் தேதி மாலை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் அழைத்துசென்று கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை பெரிய கோவிலில் நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி
தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2. சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
3. முளைக்கொட்டு திருவிழாவில் போலீஸ்காரர் கரகம் எடுக்க கோர்ட்டு அனுமதி
இளையான்குடி அருகே கோவில் முளைக்கொட்டு திருவிழாவில் கரகம் எடுக்க போலீஸ்காரருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
4. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5. தமிழக அரசு பஸ்கள் புதுவை வழியாக செல்ல அனுமதி
தமிழக அரசு பஸ்கள் புதுவை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.