முளைக்கொட்டு திருவிழாவில் போலீஸ்காரர் கரகம் எடுக்க கோர்ட்டு அனுமதி
இளையான்குடி அருகே கோவில் முளைக்கொட்டு திருவிழாவில் கரகம் எடுக்க போலீஸ்காரருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைககிராமத்தில் தெற்கு வலசைககாடு முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு காவல்துறையில் பணிபுரியும் பாண்டி (வயது52) என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக கரகம் எடுத்து ஆடி வருகிறார். இதற்கு முன்பு இவரது தந்தை சுப்பையா உள்ளிட்டோர் பரம்பரை பரம்பரையாக கரகம் எடுத்து ஆடி வந்துள்ளனர்.
இந்தநிலையில் திருவிழாவில் பிரச்சினை ஏற்பட்டு கோவிலை சேர்ந்தவர்கள் பாண்டி கரகம் எடுக்க அனுமதி மறுத்தனர்.இது சம்பந்தமாக பாண்டி இளையான்குடி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் மனு செய்தார்.
உத்தரவு
இந்தநிலையில் பரம்பரை அடிப்படையில் தொடர்ந்து கரகம் எடுக்க பாண்டிக்கு அனுமதி வழங்கி, போலீசார் பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முளைப்பாரி திருவிழாவில் பாண்டி கரகம் எடுக்க உள்ளார்.

Related Tags :
Next Story