மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு + "||" + Farmers accuse officials of negligence in damaging germinated paddy purchased

கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம் அதிகாரிகள் அலட்சியம் என விவசாயிகள் குற்றச்சாட்டு
திருப்பனந்தாள் அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் முளைத்து சேதம் அடைந்துள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருமங்கைச்சேரி, நெய்குப்பை உள்ளிட்ட கிராமங்களில் 1,300 எக்டேர் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி நடைபெற்றது. இதில் குறுவை பயிரை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கைச்சேரி பகுதியில் அறுவடையான நெல் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்து வருகிறது. இதை விவசாயிகள் சாலையோரம் காய வைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் இலக்கை விட இந்த ஆண்டு கூடுதலாக நெல் அறுவடையாகி இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

மழையில் நனைந்து வீணாகும் நெல்

அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனுக்குடன் நெல் கொள்முதல் நடைபெறாத காரணத்தால் மழையில் நனைந்து நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருமங்கைச்சேரி பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம் அடைந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

தரமான தார்ப்பாய்கள்

அறுவடையான நெல்லை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் திருமங்கைச்சேரி நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தரமான தார்ப்பாய்களை கொண்டு மூடி வைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோட்டூர் அருகே, தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் வேதனை
கோட்டூர் அருகே தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகும் அபாய நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
2. விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு - மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.
3. பலரது வேலையை பறித்து விட்டு தேசிய வேலையில்லா தின கொண்டாட்டம்; நடிகை கங்கனா குற்றச்சாட்டு
பலரது வேலையை பறித்து விட்டு தேசிய வேலையில்லா தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என தனது அலுவலக கட்டிடம் இடிப்பு பற்றி நடிகை கங்கனா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. கொள்ளிடம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பருத்தி விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
கொள்ளிடம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பருத்தி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
5. பெரம்பலூரில் சந்தைகள்- காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூரில் உழவர் சந்தை, வாரச்சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.