ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் மனு


ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 17 Sept 2020 4:22 AM IST (Updated: 17 Sept 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட விளாகம் கிராமத்தில் பெருமாள் உடையார் ஏரி மற்றும் பாம்பன் உடையார் ஏரி ஆகிய ஏரிகள் உள்ளன.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட விளாகம் கிராமத்தில் பெருமாள் உடையார் ஏரி மற்றும் பாம்பன் உடையார் ஏரி ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பயன்படுவது மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு ஏரிகளின் பெரும்பாலான பகுதிகளை அப்பகுதியை சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து நிலங்களாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். மீதமுள்ள கொஞ்ச ஏரியையும் மீன் குத்தகை எடுப்பவர்கள் கோழி மற்றும் கால்நடைக் கழிவுகளைக் கொட்டி நீரை முற்றிலுமாக மாசுபடுத்தி வருகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள மீன் குத்தகையை தடுத்து நிறுத்தக் கோரியும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன், ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை வாங்கி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Next Story